எமனுடன் போராடிய நிலையிலும் வாழ்த்துச் செய்தி கூறிய பீலே!

எமனுடன் போராடிய நிலையிலும் வாழ்த்துச் செய்தி கூறிய பீலே!
Published on

கால்பந்து உலகில் ஜாம்பவானாக அறியப்படுபவர் பிரேசிலை சேர்ந்த பீலே. சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பீலே, நேற்று காலமானார். பீலேவின் இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்ளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும், அவரவர்க்கென்று சில வேலைகள் இந்த பூமியில் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் கால்பந்து விளையாட்டுதான் பீலேவின் வாழ்க்கையாக மாறிப்போனது. அவரும் அந்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் நிறவெறி ஆதிக்கம் அதிகமாக இருந்துவந்த நிலையில், விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைத்தவர் பீலே. எப்படி கிரிக்கெட்டுக்கு பிராட்மேன் பார்க்கப்படுகிறாரோ அதேபோல் கால்பந்து விளையாட்டு என்றால் பீலேதான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு அவருடைய விளையாட்டுக்கள் அனைவரையும் கவர்ந்தன. இன்னும் சொல்லப்போனால் பீலே வந்தபின்தான் கால்பந்து போட்டிகள் அதிகளவு சுவாரஸ்யத்தையும் பெற்றுள்ளது என்றால் அது ஏற்கத்தக்க விஷயம்தான்.

இவர் 1977ல் கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் இன்று வரை கால்பந்து விளையாட்டை நேசித்து வருகிறார் என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதுமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

பீலே சமீபகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வேளையில், கடந்த நவம்ர் 29ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கால்பந்து மன்னன் பீலே உயிருக்குப் போராடி வந்த நிலையிலும் அவர் வெளியிட்டுள்ள கால்பந்து குறித்த பதிவு ரசிகர்களையும், வீரர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அப்பதிவில், 1958ல், 'நாட்டுக்காக உலகக்கோப்பையை வென்று தருவேன்' என்று என் தந்தைக்கு நான் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தபடி பிரேசில் தெருவில் நடந்தேன்.

தற்போது, இதே பிரேசிலில் என்னை போல் பலரும் உலககோப்பையை வெல்வேன் என்று நிச்சயம் சத்தியம் செய்துவிட்டு, அதை நிறைவேற்ற பயணிக்கிறார்கள். நான் மருத்துவமனையில் இருந்தபடி, நிச்சயம் கால்பந்து உலககோப்பை போட்டிகளை பார்த்து பிரேசிலுக்கு ஆதரவு அளிப்பேன். என அந்த பதிவில் வெளியிட்டு இருந்தார்.

மருத்துவமனையில், உயிருக்கு போராடி வந்த நிலையிலும் அவர் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களையும், வீரர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com