கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அதிசயம்: 11 வீரர்களும் 0 ரன்கள்! 1000 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ்..!

Pranav Dhanawade
Pranav Dhanawadesource:Express.co.uk
Published on

கிரிக்கெட் பல வித்தியாசமான ஆட்டங்களை கண்டு வந்துள்ளது.அவைகளில் இரண்டு ஆட்டங்களின் ரன்கள் பதித்த சாதனைகள் பற்றி இங்கு காண்போம்.இந்த இரண்டு ஆட்டங்களும் பள்ளிகளுக்கு இடையில் நடைப் பெற்றவை மும்பை மற்றும் மும்பை அருகில்.ஒரு ஆட்டத்தில் 11 ஆட்டக்காரர்களும் ரன் எதுவும் எடுக்கவில்லை.

வேறு ஒரு ஆட்டத்தில் நெடுங்கால உலக சாதனையை முறியடித்து ஒரு புதிய உலக சாதனை படைத்த நிகழ்வு நடந்தேறியது.

2019 ஆம் ஆண்டில் 16 வயதிற்குள் உட்பட்டோர்கான புகழ் பெற்ற ஹாரீஸ் ஷீல்ட பந்தயம். ( Harris Shield)

சுவாமி விவேகானந்த் இன்டர்நேஷனல் பள்ளி, போரிவல்லி, மற்றும் சில்ட்ரன்ஸ் வெல்பெர் சென்ட்ரல் பள்ளி, அந்தேரி இடையில் ஆன மேட்ச்சில் முதலில் விளையாடிய விவேகானந்த் பள்ளி ரன்களை குவித்த வண்ணம் இருந்தனர். 45 ஓவர்களில் அவர்களது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 761 ரன்கள்.

அதில் பாதிக்கு மேல் ரன்களை எடுத்து அசத்தினார் ஒரே ஒரு வீரர் மீட் மாயிகர். இவர் சகட்டு மேனிக்கு விளாசி தள்ளினார் எதிரணி வீரர்கள் வீசிய பந்துக்களை. 134 பந்துக்கள் எதிர் கொண்ட இவர் அடித்தது 6 சிக்ஸர்கள் 56 பவுண்டரிகள். குவித்த ரன்கள் 338* நாட் அவுட்.

ஓடி ஓடி ஆடி களைத்து இருந்த சில்ட்ரன்ஸ் பள்ளி வீரர்கள் சிறிதும் எதிர் பார்க்காத ஆட்டங்களை வெளிப் படுத்தினர். ஒன்றன் பின் ஒன்றாக வீரர்கள் அவுட் ஆன வண்ணம் திரும்பினார்கள்.அந்த அணி 754 ரன்கள் என்ற அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தனர்.ஆம் . அந்த அணி எடுத்த மொத்த ரன்கள் 7 மட்டும் தான்.

இதில் வியக்க வைக்கும் விவரம் இந்த 7 ரன்களும் உபரி ரன்களாக கிடைத்தவை. ( எக்ஸ்ட்ரா ) ( Extra ) அவற்றில் 1 ரன் பை மற்ற 6 ரன்கள் வைட் பந்துக்கள் வீசியதன் மூலம்.அப்படி என்றால்.. தாங்கள் ஊகிப்பது சரிதான்.

11 வீரர்களும் தலா ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் 0 ரன்னுக்கு அவுட் ஆனார்கள் .

2016 ஆம் ஆண்டில் மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதியில் ஆர்யா பள்ளிக்கும், ஸ்ரீமதி கே காந்தி பள்ளிக்கும் இடையில் எச் டி பந்தாரி கோப்பைக்கான ( H T Bhandari Cup ) போட்டி மேட்ச் நடைப் பெற்றது. முதலில் விளையாடிய ஆர்யா பள்ளி வீரர்கள் 31 ரன்களில் ஆல் அவுட்.தொடர்ந்து ஆடிய ஸ்ரீமதி கே காந்தி பள்ளி துவக்க வீரர் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.அட்டகாசமான ஆட்டம் அந்த 15 வயது வீரரிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது.

பிரணவ் தனவாடே என்ற அந்த வீரர் சதங்களை தொடர்ந்து குவித்த வண்ணம் இருந்தார்.அவர் பேட்டில் இருந்து அவர் எதிர் கொண்ட பந்துகள் மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் பயணம் செய்தன.இவ்வாறு அவர் ரன்களை குவித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவர் முறியடித்தது இரண்டு முக்கிய ரிகார்ட்டுக்கள் ஆகும்.

இந்திய பள்ளிகளுக்கான தனி வீரர் அதிக பட்ச ரன்கள் 546 எடுத்த பிரித்வி ஷாவின் ஸ்கோர் ஆகும் .இந்த ரிகார்டை தாண்டி இவர் ரன்கள் அடித்த வண்ணம் இருந்தார்.

1899 ஆம் வருடம் இங்கிலாந்தின் சிறுவன் ஆர்த்தூர் கோலின்ஸ் பள்ளிகளுக்கான மேட்ச்சில் அதிக பட்ச 628* நாட் அவுட் ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து இருந்தான். அதையும் தனது திறமை மிக்க ஆட்டத்தால் கடந்து முறியடித்து தன் ரன்கள் குவிப்பு பணியில் கவனம் செலுத்தினார் பிரணவ் தனவாடே, 116 வருடங்களுக்கு பின்பு அந்த ரிகார்டும் முறியடிக்கப் பட்டது.

பிரணவ் தனவாடேயின் ரன்கள் கூடுதல் சதங்களை கடந்து பயணம் செய்தது. மூன்று இலக்க எண் ரன்கள் நான்கு இலக்கத்தை தாண்டியது.ஆம் 1000 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டு இருந்தார்.அவர் 1009 ரன் எடுத்த பொழுது அணி 1465 /3 என்ற ஸ்கோரில் டிக்ளர் செய்யப் பட்டது.

எதிரணியினர் 56 ரன்களில் இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட் ஆக, பிரணவ் தனவாடேயின் பள்ளி ஒரு இன்னிங்ஸ் 1382 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி அடைந்தது.

இவர் மிக எளிய பின்புலத்தில் இருந்து கிரிக்கெட் ஆட வந்தவர். ஆட்டோ ஓட்டுனராக பணியில் இருந்த இவரது

தந்தை பிரணவ் தனவாடேயின் ஆர்வத்தை ஊக்குவிக்க மிகவும் சிரமம் பட்டார். தனவாடேயின் கோச்சும் சிறப்பாக வழி நடத்தி இவரை உருவாக்க பாடுபட்டார். இவரது இந்த உலக சாதனையை டெண்டுல்கர், தோனி மற்றும் பலரும் பாராடினார்கள். பரிசுகள் குவிந்தன.

இவரது சாதனை விவரங்கள் :

  • 1009* நாட் அவுட் ரன்கள்

  • 327 எதிர் கொண்ட பந்துக்கள்

  • 308.56 சராசரி

  • 129 பவுண்டரிகள்

  • 59 சிக்ஸர்கள்

இதையும் படியுங்கள்:
8 விரல்களுடன் டென்னிஸ் உலகில் சாதனை படைக்கும் மங்கை! பிரான்செஸ்கா ஜோன்ஸின் உருக்கும் கதை!
Pranav Dhanawade

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com