மேற்கு மாம்பலம் –டு- மெல்போர்ன்.. அசர வைக்கும் அற்புதக் காதல்!

மேற்கு மாம்பலம் –டு- மெல்போர்ன்.. அசர வைக்கும் அற்புதக் காதல்!

பிரமோதா

ஆஸ்திரேலியாவின் அதிரடி கிரிக்கெட் வீரரான க்ளென் மேக்ஸ்வெல் மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் வின்னி ராமனை திருமணம் செய்யவுள்ளதுதான் இப்போது ஹாட்-டாபிக்! மார்ச் மாதம் 27-ம் தேதி நடக்கவுள்ள இவர்களின் திருமணப் பத்திரிகை தமிழ் முறைப்படி மஞ்சள் பத்திரிகையாக அடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான க்ளவுன் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடினார். இந்நிலையில், மீண்டும் மேக்ஸ்வல்லை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வின்னி ராமனின் சொந்த ஊர் சென்னை, மேற்கு மாம்பலம் ஆகும். ஆஸ்திரேலியாவில் ஃபார்மஸி படிப்பு முடித்து, அங்கேயே வின்னி வசித்து வந்த நிலையில், மேக்ஸ்வெல்லுடன் சந்திப்பு ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் காதலாக  மாறியது. சில ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, அதையடுத்து இந்திய முறைப்படி 2020-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

''ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக உடனடியாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மார்ச் 27- தேதி மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதிகளின் திருமணத்தௌக்கு நாள் குறித்தோம்'' என்கின்ற்னர் வின்னியின் பெற்றோர்.

''பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். நான் உண்மையிலேயே பாக்கியசாலிதான். எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், மீண்டும் ஐபிஎல் போட்டிக்காக  ஆர்சிபி அணிக்கு தேர்வானது டபுள் சந்தோஷம்'' என்கிறார் கிளென். இந்த காதல் ஜோடிகளின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com