சர்வதேச செஸ் போட்டி-2022: முதன்முறையாக சென்னையில் நடக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!

சர்வதேச செஸ் போட்டி-2022: முதன்முறையாக சென்னையில் நடக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!

சர்வதேச செஸ் போட்டிகளுக்கான கூட்டமைப்பின் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக இந்தியாவில் சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது..

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சர்வதேச சதுரங்க போட்டி-2022 எனப்படும் செச் ஒலிம்பியாட் போட்டிகளை முதன்முறையாக இந்தியாவில் – குறிப்பாக சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு இச்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

ரஷ்யாவில் நடத்தப்படவிருந்த இந்த  செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, இப்போது அந்நாட்டில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக தவிர்க்கப் பட்டது. அதையடுத்து இப்போட்டியை தங்கள் நாடுகளில் நடத்த பல நாடுகள் முயற்சித்தன. இந்நிலையில் இப்போட்டியை முதன்முறையாக இந்தியாவில் – குறீப்பாக சென்னையில் நடத்தும் ஏலத்தை அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புடன் வென்றதில் தமிழ்நாடு அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

இப்போட்டிகளில்200 நாடுகளைச் சேர்ந்த 2000 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்தியாவின் சார்பில் பல அணிகள்  பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும். இப்போட்டிகள் உத்தேசமாக ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 –ம் தேதி  வரை சென்னையில் நடைபெறும்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com