ஐசிசி உலககோப்பை போட்டி: நியூசிலாந்து,நெதர்லாந்து மோதல்!

ICC Men's world cup 2023: New zealand VS Neatherland
ICC Men's world cup 2023: New zealand VS Neatherland

சிசி 13 வது உலககோப்பைத் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. அதன்படி இன்று ஐசிசி லீகின் ஆறாவது போட்டி நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இரண்டு மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முன்னதாக கடந்த 6ம் தேதி நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்க்கொண்டது. இந்த போட்டியில், நியூசிலாந்து 283 ரன்கள் எடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை தோல்வியை தழுவச் செய்தது. அதேபோல்,குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இன்று நடைபெறும் ஐசிசி உலககோப்பை சாம்பியன்ஷிப் போட்டில் நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளது. முன்னதாக நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு முறை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து போட்டிகளிலுமே நியூசிலாந்து அணியை வென்றுள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலககோப்பை போட்டியில்தான் முதன் முறையாக நெதர்லாந்து அணி உலககோப்பை போட்டியில் கலந்துக்கொண்டது. இந்தபோட்டியில், நியூசிலாந்தை எதிர்க்கொண்ட அந்தஅணி 119 ரன்கள் மட்டும் எடுத்து மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் ரச்சினும் கான்வேயும் சதம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் இன்று அவர்களின் பேட்டிங்கிற்கு நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் மேட் ஹென்ரி பந்துவீச்சு சிறப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் தற்போதுவரை இல்லை. ஆனால் நெதர்லாந்து அணியில் வான் பீக்ஸ் காயம் காரணமாக வேரொருவரை மாற்ற கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேன் வில்லியம்சன் இன்னும் அணிக்கு திரும்பாத காரணத்தால் டாம் லாதமே அணியின் கேப்டனாக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய போட்டி:

ஐசிசி 13 வது லீகின் இன்றைய போட்டி ஹைத்ராப்பாத்தில் உள்ள 38 ஆயிரம் கொண்ட ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியின் நடுவராக ரொட் டக்கர் ,பால் ரீஃபெல் மற்றும் ஜோயல் வில்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்போட்டியை ஹைத்ராபாத் சன் ரைஸ் அணி தொகுக்கவுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

ராஜீவ் காந்தி மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக அமையும். இந்த பரப்பில் ஏறத்தாழ 350 ரன்கள் அடித்து இலக்கை நிர்ணையிக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com