இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் மெனு: இணையத்தில் வைரல் போட்டோஸ்!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் மெனு:  இணையத்தில் வைரல் போட்டோஸ்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ( டிசம்பர் 26) தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம், மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான மதிய உணவுப் பட்டியல் அட்டவணை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .நேற்றைய போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு வீரர்களுக்கான உணவு இடைவேளை வந்தது .அப்போது இந்திய அணியின் ஓய்வறையில் அவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பட்டியல் பலகையை மைதானத்திலிருந்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த உணவுப் பட்டியலில் சிக்கன் செட்டிநாடு,வெஜிடபிள் கடாய், போன்ற பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது .தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com