சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி; நாளை முதல் பயிற்சி முகாம் தொடக்கம்!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி; நாளை முதல் பயிற்சி முகாம் தொடக்கம்!

சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், நாளை தொடங்கி இம்மாதம் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது 

இதுகுறித்து அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்ததாவது:

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பாக பங்கேற்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள A பிரிவு அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நாளை முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த், இஸ்ரேல் நாட்டை சார்ந்த கிராண்ட் மாஸ்டர் கெல்ஃபாண்ட் ஆகியோர் இந்த வீரர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். மேலும் இந்திய A பிரிவின் பயிற்சியாளர்களான ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அபிஜித் குண்டே ஆகியோரும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள். 

– இவ்வாறு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com