ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதல்!

Australia Vs South Africa
Australia Vs South Africa

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 8 ஆம் தேதி இந்திய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இன்று லக்னெளவில் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.

தொடக்கப் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா, இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடிய போதிலும் அதை திறமையாக சமாளித்து வெற்றிகண்டது.

இந்த நிலையில் முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, மீண்டும் பின்னடைவை சந்தித்துவிடக்கூடாது என்பதால் தென்னாப்பிரிக்காவை வெற்றிகொள்ள முனைப்பு காட்டி வருகிறது.

ஐந்து முறை சாமபியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தாலும், தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டுமானால் சுறுசுறுப்புடனும் ஒன்றுபட்டும் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் ஆக்ரோஷத்துடன் விளையாடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் எவரும் அடித்து விளையாடாமல் குறைந்த  ரன்களிலேயே அவுட்டானார்கள். மேலும் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக போராடவேண்டியிருந்தது.

அதே நேரத்தில் முதல் போட்டியில் இலங்கை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை இரண்டாவது போட்டியில் சந்திக்க தயாராகிவருகிறது.

ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் காயம் அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். எனினும் தசைப்பிடிப்பிலிருந்து மீண்டுவந்துள்ள ஸ்டோனிஸ் இந்த போட்டியில் கேமரான் கிரீனுக்கு பதிலாக இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

வேகப் பந்துவீச்சாளர்கள் பாட் கம்மின்ஸ், ஜோ ஹாஸில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவுக்கு கிலியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி கிளப்பிய குயின்டன் டீ காக், ரஸ்ஸி வாண்டர் மற்றும் அய்டன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாஸன் ஆகியோரையே பெரிதும் நம்பியுள்ளது.

லக்னெவில் உள்ள ஏகனா ஆடுகளம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.  ஒருவேளை ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமானால், தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் டப்ரைஸ் ஷம்சி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் வெற்றி யார் பக்கம் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com