ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்புக்கு தடைப்போடுமா நெதர்லாந்து அணி?

ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்புக்கு தடைப்போடுமா நெதர்லாந்து அணி?

லககோப்பை இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்று ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு தடைப்போடுமா என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

உலககோப்பை 34வது லீக் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று இரண்டு மணிக்கு மோதவுள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி அக்டோபர் 30ம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோல் நெதர்லாந்து அணி அக்டோபர் 28ம் தேதி நடந்த பங்களாதேஷ் உடனான போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் தனது முந்தைய போட்டிகளில் வெற்றிபெற்று இன்று நேருக்கு நேர் மோதவுள்ளது.

புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகள் வெற்றிபெற்று ஆறாம் இடத்தில் உள்ளது. அதேபோல் நெதர்லாந்து அணி ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றிபெற்று எட்டாம் இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முன்னேறி அரையிறுதி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நெதர்லாந்து அணி வெற்றிபெற்றால் ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.

நெதர்லாந்து அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவே செல்லும். இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி மற்றும் நியூசிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி முதல் நான்கு இடத்தில் வர வாய்ப்புள்ளது. இதுவே ஆப்கானிஸ்தான் அணியின் உலககோப்பை ட்ராபி ஆசைக்கு இறுதி வாய்ப்பாகும்.

அதேபோல் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றால் ஆறாவது இடத்தைப் பிடிக்கும். மேலும் இதே போட்டியில் அதிக ரன் ரேட்ஸும் எடுத்தால் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியையும் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து அடுத்த போட்டியிலும் வெற்றிபெற்றால் ரன்ரேட்ஸ் கணக்கின்படி நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

பிட்ச் ரிப்போர்டின் படி உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தால் வெற்றி விகிதம் அதிகம் என ரிப்போர்ட் கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com