2023 கிங்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா அதிர்ச்சித் தோல்வி!
கிங்க்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி, இராக்கிடம் 4-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது.
நட்சத்திர வீர்ர் சுநீல் சேத்ரி அணியில் இல்லாத நிலையிலும் இந்திய அணி, உலகின் 70-வது இடத்தில் உள்ள இராக் அணியை திறமையாகவே எதிர்கொண்டது. தொடக்கத்தில் இந்தியா முன்னிலைப் பெற்றிருந்தது. வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் இருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது.
முதலில் இந்திய அணி வீர்ர் நரோம் மகேஷ்சிங் ஒரு கோல் போட்டார். அடுத்து இராக் கோல் கீப்பர் ஜலால் ஹஸன், இந்தியாவுக்கு சாதகமாக கோல் போட்டார். இதையடுத்து இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இராக் அணியினர் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோல் போட்டனர். இதையடுத்து இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீர்ர் ஜைதேன் இக்பால், இந்திய வீர்ர் பிராண்டன் பெர்னாண்டசிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் அவருக்கு சிவுப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இராக்குக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதை அவர்கள் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்திய அணியின் பிராண்டன் பெர்னாண்டஸ் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
இராக் அணிக்கான வெற்றிகோலை அய்மென் அடித்தார். அவர் பந்தை திறமையாக கடத்தி வந்து கோலுக்குள் அனுப்பினார். இந்திய அணியின் கோல் கீப்பர் குர்ப்ரீத் முயன்றும் அதை தடுக்க முடியவில்லை.
இந்திய அணி தோல்வி அடைந்த போதிலும் அவர்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இனி இந்தியா மூன்றாவது இடத்துக்காக தாய்லாந்து அல்லது லெபனான் அணியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.