ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

ஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்க இருக்கும் நிலையில், இந்தப் போட்டி அதற்கான ஒத்திகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஏற்கெனவே 2 - 0 என முன்னிலைப் பெற்று தொடரை வென்றுள்ள நிலையில், இறுதிப் போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஓய்வெடுத்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மூன்றாவது போட்டியில் களம் இறங்க உள்ளனர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தால், ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாக இருக்கும். (தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள்). எனினும், மிட்செல் ஸ்டார்க் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக சில வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் அணியில் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கிளென் மாக்ஸ்வெல் இருவரும் விளையாடுவதால் இன்றைய ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தூரைப் போலவே ராஜ்கோட் ஆடுகளமும் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பருவநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

இந்திய உத்தேச அணி: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா.

ஆஸ்திரேலிய உத்தேச அணி: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, அலெக் காரே (விக்கெட் கீப்பர்), கிளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹாஸில்வுட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com