ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்!

சியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காயத்தில் இருந்து திரும்பிய கே.எல்.ராகுல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதேசமயம், அவரது காயம் குணமாகிவிட்டாலும், சிறிய அளவில் அதன் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், 18வது வீரராக கே.எல்.ராகுலுக்கு பேக்அப் வீரராக சஞ்சு சாம்சன் அணியுடன் பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தனது கடுமையாக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், ‘‘கே.எல்.ராகுலுக்கு நிக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி இருந்தால் அவரை அணியில் சேர்க்காதீர்கள். ஒரு வீரர் முழுவதுமாக உடற்தகுதி பெறாமல் இருந்தால், தேர்வு செய்யும்பொழுது அவர் கிடைக்க மாட்டார் என்றால் நாங்கள் அவரை தேர்வு செய்ய மாட்டோம். இதுதான் அன்று எங்கள் தேர்வு குழுவின் கொள்கையாக இருந்தது. அவர் முழு உடற்தகுதி பெற்றால் நீங்கள் உலகக் கோப்பைக்குக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். அது பிரச்னை கிடையாது. இப்படி முழு உடற்தகுதி இல்லாத ஒரு வீரருக்கு சஞ்சு சாம்சனை மாற்றாக தேர்ந்தெடுப்பது ஏன்? இதை எப்படி எடுத்துக்கொள்வறு என்று புரியவில்லை. நீங்கள் ஆசியக் கோப்பையில் விளையாடுகிறீர்கள். இதுவும் முதன்மையான தொடர்தான். இரண்டு முறை ஆசியக் கோப்பையில் தேர்வு பெற முடியாமல் போயிருக்கிறது. நீங்கள் உங்களுக்கென்று ஏதாவது தேர்வுக் கொள்கையை வைத்திருக்க வேண்டும். நான் இதில் எந்த கிரடிட்டையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. நாங்கள் அப்போது எப்படிச் செயல்பட்டோம் என்பதை மட்டும்தான் சொல்கிறேன்.

ஒரு டெஸ்ட் போட்டியின்போது இப்படி ஒரு பிரச்னை எங்களுக்கு ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியின்போது, தான் சரியான நேரத்தில் உடற்தகுதி பெற்றால் விளையாடுவதாக லக்ஷ்மன் எங்களிடம் கூறினார். அதனால் நாங்களும் அவர் உடற்தகுதி இல்லாதபோதும் அவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் உடற்தகுதியை போட்டியின்போது எட்டவில்லை. அவருக்கு மாற்றாக இருந்த ரோஹித் சர்மாவும் கால்பந்து விளையாடி காயமடைந்தார். அதனால் விருத்திமான் சகா அந்தப் போட்டியில் அறிமுகமானார். அன்று முதல் நாங்கள் உடல் தகுதி உள்ள வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தோம்” என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com