ஆசிய ஹாக்கி மகளிர்: இந்தியா- தென்கொரியா ஆட்டம் டிரா!

ஆசிய ஹாக்கி மகளிர்: இந்தியா- தென்கொரியா ஆட்டம் டிரா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கியில் ஏ பிரிவு போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியா- தென்கொரியா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தென்கொரியாவின் சோ ஹைஜின் ஆட்டம் தொடங்கியவுடன் ஒருகோல் போட்டு தமது அணியை முன்னிலைப் படுத்தினார். ஆனால், 44-வது நிமிடத்தில் இந்தியாவின் நவநீத் கெளர் ஒரு கோல் போட்டு அதை சமன் செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஏ பிரிவில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் அதிக கோல் வித்தியாசத்தில் இந்தியா பட்டியலில் முன்னிலையில் உள்ளது. தென்கொரியாவுடனான போட்டியில் இந்தியா டிரா செய்த போதிலும் பட்டியலில் முதலிடத்தை இந்தியா உறுதிசெய்கிறது. அதாவது நான்கு குழு ஆட்டங்களுக்குப் பிறகு முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே அறையிறுதிக்குள் நுழைய முடியும்.

ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா, தென்கொரியா ஆகிய இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை நடத்தின. தென்கொரியாவின் சோ ஹைஜின் முதல் கோலை போட்டு தமது அணியை முன்னிலைப் படுத்தினார். ஆனாலும், அதன் பிறகு இந்திய அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் தீப் கிரேஸ் எக்கா தென்கொரியாவின் அச்சுறுத்தலை தடுப்பதில் தீவிரம் காட்டினார்.

எனினும் தென்கொரியாவுக்கு அடுத்தடுத்து கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இந்திய அணி வீர்ர்கள் திறமையாக விளையாடி அவர்களின் கோல் போடும் முயற்சியை தடுத்துவிட்டனர். முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் தென்கொரியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மனம் தளர்ந்து விடாமல் அதிக ஆற்றலுடன் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்தியாவுக்கு பலமுறை பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றை கோலாக்க முடியவில்லை. இதையடுத்து தென்கொரியா தொடர்ந்து முன்னிலை பெற்றது.

எனினும் ஆட்டம் முடிய இன்னும் சிறிது நேரம் இருக்கையில், பெனால்டி கார்னரைத் தொடர்ந்து இந்தியாவின் தற்காப்பு ஆட்டக்காரர் தீப் கிரேஸ் எக்கா தட்டிக் கொடுத்த பந்தை நவநீத் கெளர் திறமையாக கடத்திச் சென்று கோல் போட்டார். இதையடுத்து இந்தியா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் வெற்றிக்காக தொடர்ந்து போராடின. ஆனாலும், எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com