ஆசிய கால்பந்து: சீனாவிடம் இந்தியா தோல்வி!

India vs China football
India vs China football

சீனாவில் ஹாங்ஸுவில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான தொடக்க கால்பந்து போட்டியில் இந்தியா, சீனாவிடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

சீனாவின் சார்பில் ஜியாவ் டியானி (17-வது நிமிடம்), டாய் வெஜுன் (51-வது நிமிடம்), டாவ் குயாங்லாங் (72- மற்றும் 75-வது நிமிடம்) மற்றும் ஹாவ் ஃபாங் (90-வது நிமிடம்) ஆகியோர் 5 கோல் போட்டனர். இந்திய அணியின் ராகுல் கே.பி. ஆட்டம் தொடங்கிய 45-வது நிமிடத்தில் முதல் கோலை போட்டார்.

ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டி சீனாவின் ஹாங்ஸுவில் வருகிற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ஏ பிரிவில் வலிமையான சீனா, வங்கதேசம் மற்றும் மியான்மருடன் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் பட்டியலில் முதல் இரண்டு இடம்பெறும் அணிகள் ரவுண்ட் ராபின் சுற்றுக்கு முன்னேறும்.

இதன் அடிப்படையில் முதல் போட்டியில் இந்தியா முதல் போட்டியில் சீனாவை சந்தித்தது. கேப்டன் சுநீல் சேத்ரி தலைமையில் இந்திய அளி களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்தில் சீனாவின் ஜியாவ் டியானி முதல் கோல் போட்டார். 45-வது நிமிடத்தில் இந்திய வீர்ர் ராகுல் கே.பி. ஒரு கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணியினர் கை ஓங்கியிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் சீனாவின் டாய் வெஜுன் ஒரு கோல் போட்டார். இதையடுத்து இந்தியா 1-க்கு 2 என பின்தங்கியது. ஆட்டத்தின் 72 மற்றும் 75 வது நிமிடங்களில் சீன வீர்ர் டாவ் குயாங் லாங் இரண்டு கோல்கள் போட்டார். ஆட்டம் முடியும் நேரத்தில் அதாவது 90-வது நிமிடத்தில் சீன வீர்ர் ஹாவ் ஃபாங் ஒரு கோல் போட்டார். இதையடுத்து 1-5 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வங்கதேச அணியை மியன்மார் அணி 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com