ஆசிய விளையாட்டு: ஆடவர் கைப்பந்து, கம்போடியாவை வென்றது இந்தியா!

Asian Games 2023: Men's Volleyball
Asian Games 2023: Men's Volleyball
Updated on

ஆசிய கோப்பைக்கான ஆடவர் கைப்பந்து போட்டியில் இந்திய கைப்பந்து அணி கம்போடியாவை 3-0 என வென்றது. சி பிரிவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியா, கம்போடியாவை 25-14, 25-13, 25-19 என்ற கணக்கில் வென்றது. கம்போடியாவை வெல்வது ஒன்றும் இந்தியாவுக்கு கடினமானதாக இல்லை.

இந்த போட்டியில் ஜப்பான், சீனா மற்றும் தென்கொரிய அணிகள் பலம் வாய்ந்தவை. ஆசிய ஆடவர் கைப்பந்து போட்டியில் ஜப்பான் இதுவரை 16 முறை தங்கம் வென்றுள்ளது. சீன அணி 11 முறை தங்கம் வென்றுள்ளது. தென்கொரியா 5 முறை தங்கம் வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

1958 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில்தான் வாலிபால் (கைப்பந்து) முதல் முதலாக அறிமுகமானது. இந்திய ஆடவர் அணி இதுவரை 3 முறை பதக்கம் வென்றுள்ளது. 1962 ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய சிறப்பாக விளையாடி ரன்னர் இடத்தை பிடித்தது. 1958 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் (37 ஆண்டுகளுக்கு முன்) நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெண்கலம் வென்றது.

logo
Kalki Online
kalkionline.com