பாட்மின்டன்: பதக்கத்தை உறுதி செய்தார் பிரனாய்!

prannoy badminton player
prannoy badminton player

கோபன்ஹேபனில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரனாய், டென்மார்க்கை சேர்ந்த வீர்ரும், நடப்பு சாம்பியனுமான விக்டர் ஆக்ஸல்சென்னை போராடி வென்றார். பரபரப்பான ஆட்டத்தில் உலகின் நெம்பர் 1 வீர்ரான விக்டரை அவர் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

கேரளத்தைச் சேர்ந்த 31 வயதான பிரனாய், சமீபத்தில் மலேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 500 போட்டியில் பட்டம் வென்றவர். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஐந்து முறை பதக்கம் வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் தங்கம் தட்டிச்சென்றார். சாய்னா நெஹ்வால் 2  (ஒரு வெள்ளி மற்றும் ஒருவெண்கலம்), கிடம்பி ஸ்ரீகாந்த (வெள்ளி), லட்சயா சென் (வெண்கலம்), சாய் பிரனீத் (வெண்கலம்), பிரகாஷ் படுகோனே (வெண்கலம்) ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் பதக்கம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி வெண்கலம் வென்றனர். 2011 ஆம் ஆண்டில் ஜ்வாலா கட்டா, அஸ்வினி நாச்சப்பா ஜோடி வெண்கலம் வென்றது.முன்னதாக சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்கார்ப் ராஸ் முஸ்ஸன் ஜோடியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

உலகின் 2 ஆம் நிலை ஆட்டக்கார்ர்களான சாத்விக்-சிராக் ஜோடி, டென்மார்க் ஜோடியிடம் 18-12, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தனர். அவர்கள் இருவரும் தாக்குதல் ஆட்டத்தை நடத்தாதல் எளிதில் வீழ்ந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com