பாட்மின்டன்: காலிறுதியில் சாத்விக்- சிராக் ஜோடி

சாத்விக்- சிராக்
சாத்விக்- சிராக்

கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இருவரும் காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.

சாத்விக்-சிராக் ஜோடி, இரட்டையர் பிரிவில் கடந்த ஆண்டு வெண்கலம் வென்ற, உலகின் இரண்டாம் நிலை ஆட்ட ஜோடியான  இந்தோனேசியாவின்  லியோ ரோலி கர்னாடோ மற்றும் டேனியல் மார்டின் ஜோடியை 21-15, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் வென்றது.

சாத்விக்-சிராக் ஜோடி மிகுந்த எதிர்பார்ப்புடன் தாக்குதல் ஆட்டத்தை நடத்தினர். எதிரணியின் பலவீனத்தை அவர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டனர்.

காமன்வெல்த் போட்டி சாம்பியன்களும், இந்த சீசனில் நான்கு பட்டங்களை வென்றவர்களுமான சாத்விக்-சிராக் ஜோடி, டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்கார்அப் ஜோடி அல்லது மலேசியாவின் ஓங்யூ சின் – டியோ இ யீ ஜோடியை எதிர்கொள்ளும்.

முன்னதாக மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த முறை அரையிறுதியை எட்டிய டிரெஸ்ஸா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, முதல் நிலை ஆட்டக்காரர்களான சீனாவின் சென் குயிங்சென்- ஜியா யீஃபான் ஜோடியிடம் 14-21, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

கடந்த முறை ஜெர்மன் ஓபன் போட்டியில் சீன வீர்ர்களை சந்தித்த பிறகு மீண்டும் அவர்களை போட்டியில் இந்திய ஜோடி சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு தகுதிபெற்றார். பிரணாய், சிங்கப்பூர் வீர்ரும் முன்னாள் சாம்பியனுமான லோஹ் கியான் யூவை 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்றார்.

எனினும் மற்றொரு இந்திய வீராங்கனை லக்ஷயா சென், தாய்லாந்தின் குன்லாவுட் விடிசார்னிடம் 14-21, 21-16, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com