அயர்லாந்துக்கு எதிராக களம் இறங்குகிறார் பும்ரா!

அயர்லாந்துக்கு எதிராக களம் இறங்குகிறார் பும்ரா!
Published on

ஏறக்குறைய 11 மாதங்களாக ஆடுகளத்துக்கு வெளியே ஓய்வில் இருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா, அயர்லாந்துக்கு எதிரான டி-20 ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்கிறார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா பங்கேற்பதன் மூலம் அவரது பந்துவீச்சு, அவரது ஆட்டம் என்பது தெரிந்துவிடும்.

இந்திய அணியில் இளம் ஆட்டக்காரர்களான ரிதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தாலும் அனைவரது பார்வையும் பும்ராவின் மீதுதான் இருக்கிறது.

உலக கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவாக உள்ள நிலையில் இந்தியா-அயர்லாந்து ஒருநாள் சர்வதேச போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இடுப்பு எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டதன் காரணமாக பும்ரா, அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுக்க நேர்ந்தது. இந்த நிலையில் அவர் புரண குணம் பெற்று எழுச்சியுடன் இந்திய அணிக்கு திரும்பிவந்துள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லார்கன் டக்கர், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டியில் இதுவரை அயர்லாந்து இந்தியாவை வென்றதில்லை.

இந்திய அணியில் ரிதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, பும்ரா, பிரதீஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டியில் பிரதீஷ் எப்படி விளையாடுகிறார் என்பதை பொருத்தே அவர் ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவது முடிவு செய்யப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com