மூன்றாவது ஒருநாள் போட்டியையும் வெல்ல காத்திருக்கும் பும்ரா!

மூன்றாவது ஒருநாள் போட்டியையும் வெல்ல காத்திருக்கும் பும்ரா!

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் டி-20 சர்வதேச போட்டி இன்று நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா, மூன்றாவது போட்டியையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறார். சென்ற போட்டியில் விளையாடிய வீரர்களை இன்றைய போட்டியில் இடம்பெறுவார்களா அல்லது சோதனை அடிப்படையில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

இந்த தொடரில் ஒருமுறைகூட வாய்ப்புக் கிடைக்காத நான்கு வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதாவது  ஜிதேஷ் சர்மா, அவேஷ்கான், முகேஷ்குமார் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோரே அந்த நான்கு வீரர்கள். முகேஷ் குமாராவது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளார். எனவே மற்ற மூவருக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.

எனினும் ஜிதேஷ் சர்மா அணியில் இடம்பெறலாம் என கருதப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் இரண்டு சீசன்களில் சர்மா சிறப்பாக ஆடியுள்ளார். மேலும் மற்ற விக்கெட் கீப்பர்களைவிட அவர் மாறுபட்டு செயல்படுகிறார். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாக ஆடியவர்.

முன்னிலை ஆட்டக்காரரான் ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் இருவரையும் விட சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கலாம். சர்மா இந்திய அணியில் இடம்பெறுவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கு உற்சாகம் அளிக்கு வகையில் இருக்கும். இரண்டாவது ஒருநாள் சர்வதேச டி-20 போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். ரிங்கு சிங், சிவம் துபே இருவரும் இறுதிக்கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

பேட்ஸ்மென்களை பொருத்தவரை இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் மூன்றாவது இறுதிப் போட்டியில், திலக் வர்மா தனது முந்தைய தவறுகளை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

இந்திய அணியின் உத்தேச வீரர்கள்:

ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், ரவி விஷ்ணோய், ஜஸ்ப்ரீத் பும்ரா (கேப்டன்) மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com