அனைத்து கிரிக்கெட் அணிகளிடமும் தோற்ற இங்கிலாந்து!

icc cricket world cup 2023 england squad
icc cricket world cup 2023 england squad

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது இங்கிலாந்து.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியில் பங்குபெறும் 11 கிரிக்கெட் அணியிலும் தோல்வி அடைந்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தால் 1975- ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து முதல் தோல்வியை சந்தித்தது.

அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தது.

அதைத் தொடர்ந்து 1983 இல் இந்தியாவிடமும், 1987 இல் பாகிஸ்தானிடமும் இங்கிலாந்து தோல்விகண்டது. இதனிடையே 1983 இல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

1992 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதிகம் அறியப்படாத ஜிம்பாப்வே அணியிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1996 ஆம் ஆண்டில் இலங்கை அணியிடம் இங்கிலாந்து தோற்றது. அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து தோல்வி கண்டது. 2011 ஆம் ஆண்டு வங்கதேச அணி இங்கிலாந்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதே 2011 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியிடம் இங்கிலாந்து தோற்றது. இப்போது அதாவது 2023 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் நடப்பு சாம்பியனானா இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றிக்காக போராடிய போதிலும் 215 ரன்களில் ஆட்டமிழந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com