அர்ஜுனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்யானந்தா!

அர்ஜுனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்யானந்தா!

அஜர்பைஜானில் பாகுவில் நடைபெற்றுவரும் ஃபிடே உலக கோப்பை செஸ் போட்டியில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் பிரக்யானந்தா தனது அதிரடி நகர்த்தல்கள் மூலம் அர்ஜுனை 5-4 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிரக்யானந்தா-அர்ஜுன் இடையிலான ஆட்டம் பரபரப்பாகவும் மறக்க முடியாததாகவும் இருந்தது. கறுப்பு காய்களுடன் விளையாடிய பிரக்யானந்தா 72 வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றிகண்டார்.

முக்கியமான ஆட்டத்துக்கு பிரக்யானந்தா 30 விநாடிகள் தாமதமாக வந்தாலும் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பிடித்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரக்யானந்தா, அமெரிக்காவின் ஃபாபியானோ கருவானாவை எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில் உலகின் நெ.1 ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்ஸன், அஜர்பைஜானின் நிஜாத் அபஸோவுடன் மோதுகிறார்.

2024 ஆண்டு டொரோன்டோவில் ஏப்ரல் மாதம் 2 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியின் காலிறுதியில் கார்ல்ஸன் பங்கேற்கமாட்டார் என்றாலும், பிரக்யானந்தா, கருவானா மற்றும் அபஸோவ் மூவரும் தங்களுக்கான தகுதியை நிரூபிக்க வேண்டும்.

பிரக்யானந்தா-அர்ஜுன் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாகவே சென்றது. எனினும் ஒரு கட்டத்தில் பின்தங்கியிருந்த பிரக்யானந்தா, திடீரென எழுச்சிபெற்று ஆட்டத்தை தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். அர்ஜுனும் அவருக்கு ஈடுகொடுத்து ஆடினார்.

இருவருக்கும் கூடுதல் நேரங்கள் அளிக்கப்பட்டது. அப்போது பிரக்யானந்தா தாக்குதல் ஆட்டம் நடத்தி 31 வது நகர்த்தலில் 4-3 என முன்னிலை பெற்றார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ஜுன் விளையாடினார். அந்த நேரத்தில் இருவரும் 4- என்று சமநிலை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடித்தது. இறுதியில் பிரக்யானந்தா 5-4 என்ற கணக்கில் அர்ஜுனை அதிரடியாக வென்றார்.

மகளிர் அரையிறுதிப் போட்டியில் பல்கேரியாவின் நர்கியுல் சாலிமோவா, உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக்கை 3.5- 2.5 என்ற கணக்கில் வென்றார். இவர் இறுதிப் போட்டியில் ரஷியாவின் 2- ஆம் நிலை ஆட்டக்காரரான அலெக்சான்ட்ரா கோரியாசகினாவை எதிர்கொள்றார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com