2030 இல் உலக கோப்பை கால்பந்து 3 கண்டங்களில் 6 நாடுகளில் நடைபெறும்!

2030 FIFA World Cup
2030 FIFA World Cup

2030 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மொராக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் நடத்த முன்வந்துள்ளன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தொடக்க ஆட்டங்களை உருகுவே, ஆர்ஜென்டீனா மற்றும் பராகுவே நடத்த உள்ளன என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

2030 இல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை யார் நடத்துவது என்பதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அடுத்த ஆண்டு அறிவிக்க இருந்த நிலையில் மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பென் இணைந்து நடத்த முன்வந்துள்ளது.

1930 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தின் தொடக்கப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது. அந்த போட்டியில் உருகுவே வென்றது. பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் பாலியல் அத்துமீறல் புகாருக்குள்ளான முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ் பதவி விலகியதை அடுத்த சில நாட்களில் ஸ்பெயின் அணிக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 3 கண்டங்கள் மற்றும் 6 நாடுகளில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும். குழு போட்டிகள் வெவ்வேறு பருவங்களில் இந்த நாடுகளில் நடைபெறும்.

மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போட்டியை நடத்த முன்வந்துள்ளதால் அந்த நாட்டு அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் கால்பந்து நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உருகுவே, ஆர்ஜென்டீனா மற்றும் பராகுவே தவிர மான்டிவிடியோவிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனாக ஆர்ஜென்டீனா உள்ளது.

பிளவுபட்டு நிற்கும் உலகில் சர்வதேச கால்பந்து சம்மேளமும் (FIFA) கால்பந்தும் ஒன்றிணைந்துள்ளது என்று எஃப்.ஐ.எஃப்.ஏ. தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்தார்.

முதல் மூன்று போட்டிகள் மான்டிவிடியோவில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930 இல் இங்குதான் நடைபெற்றது.

பராகுவே கால்பந்து சங்கத்தின் தலைவர் ராபர்ட் ஹாரிஸன் கூறுகையில் ஆர்ஜென்டீனா, உருகுவே மற்றும் பராகுவே உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் என்று கூறினார். ஆனால், அதை அவர் விளக்கவில்லை.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை போர்ச்சுகலும் மொராக்கோவும் நடத்தாத நிலையில் ஸ்பெயின் மட்டும் 1982 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது. மேலும் 2010 ஆண்டு ஸ்பெயின் உலகக் கோப்பையை வென்றது  குறிப்பிடத்தக்கது.

2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஆசியாவில் நடத்த உள்ளதாகவும், அந்த பகுதியைச் சேர்ந்த நாடுகள் போட்டியை நடத்த விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் உலகக் கோப்பை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com