ஐசிசி உலககோப்பை அரையிறுதிக்கு செல்லுமா இலங்கை அணி?

icc world cup 2023 srilanka squad
icc world cup 2023 srilanka squadAlex Davidson-ICC

சிசி உலககோப்பையில் இதுவரை நடந்த மூன்று சுற்று போட்டிகளிலுமே இலங்கை அணி எந்த வெற்றியும் பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் உலககோப்பையின் அரை இறுது போட்டிக்கு இலங்கை அணி செல்லுமா என்பது கேள்விகுறியாக மாறியுள்ளது.

ஐசிசி உலககோப்பையின் 13 வது லீக் இந்தியாவில் முதன்முறையாக அக்டோபர் 5ம் தேதி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லீகில் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை , தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய பத்து நாடுகள் விளையாடி வருகிறது.

இதுவரை நடைபெற்ற ஐசிசி உலககோப்பையில் டி20 மற்றும் 50 ஒவர்கள் கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து ஏழு முறை இலங்கை அணி இறுதி போட்டிற்கு சென்றுள்ளது. 1996ம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்க தலைமையிலான போட்டியில் தனது முதல் உலககோப்பை வெற்றியை இலங்கை அணி பதிவு செய்தது.

அதன்பின்ர், 2002ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை போட்டியில் இந்தியாவுடன் சேர்ந்து கோ சாம்பியனாக வெற்றிபெற்றது. 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 இறுதி போட்டியில் வெற்றிபெற்று ட்ராஃபி வென்றது. தொடர்ந்து 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி போட்டிகளில் ரன்னர் கப் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது . அதேபோல் 2009 மற்றும் 2012 ம் ஆண்டுகளில் டி20 இறுதி போட்டிக்கு சென்று ரன்னர் கப் வாங்கி இரண்டாம் இடத்தை பிடித்தது.

இவ்வாறு உலகளவில் உள்ள கிரிக்கெட் அணிகளில் பலம்வாய்ந்த இலங்கை அணி தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி 13வது லீக் போட்டியில், தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. அக்டோபர் 7ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. அபோட்டியில் தோல்வியையே சந்தித்திருந்தாலும் குசல் மெண்டிஸ் , அசலன்கா கேப்டன் ஷனகா ஆகியோர் அருமையாக விளையாடி அரைசதம் அடித்திருந்தனர்.

அதேபோல் அக்டோபர் 10 ம் தேதி நடந்த இலங்கை பாகிஸ்தான் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. அதனைத்தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் இலங்கை அணி தோல்வியையே சந்தித்தது.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலுமே இலங்கை அணி தோல்வியையே சந்தித்திருந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. குசல் மெண்டிஸ், குசல் பெரேரா,சமரவிக்ரம,பத்துன் நிசன்கா ஆகியோர் ஒவ்வொரு போட்டிகளிலுமே தங்களது முழு பங்களிப்புடன் விளையாடி சதம், அரைசதம் என மாறி மறி அடித்துள்ளனர். ஆனால் ஒரு குழுவாக இலங்கை அணியின் ஆட்டம் தோல்விலேயே முடிந்துள்ளது.

நேற்றைய ஆட்டத்திற்கு முன்புவரை இலங்கை , ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் ஒரு வெற்றிகூட இல்லாமல் புள்ளிபட்டியலின் கடைசி மூன்று இடத்தையே பிடித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த ஆஸ்திரேலியா இலங்கை போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று பத்தாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இலங்கை அணி ஒரு வெற்றியும் பெறாமல் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இன்று இரண்டு மணியளவில் தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேஷ கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து நெதர்லாந்து அணி மோதவுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளுலுமே வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே இலங்கை அணியை விட நெதர்லாந்து அணி புள்ளிபட்டியலில் முன்னேறலாம். இல்லையென்றால் இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் புள்ளிபட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் மட்டுமே நீடிப்பார்கள்.

இந்நிலையில் இலங்கை அணி இனி நடக்கவிருக்கும் ஆறு போட்டிகளையும் வென்று 12 புள்ளிகள் எடுத்தால் மட்டுமே உலககோப்பையில் அரை இறுதி போட்டியில் பங்குப்பெற வாய்ப்பு இருக்கும். அப்படி வெற்றிபெற்றாலும் கூட மற்ற அணிகளின் தோல்வி புள்ளிகளை நம்பித்தான் இலங்கை அணி இருக்க வேண்டும். இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட இலங்கை அணிக்கு உலககோப்பை அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பு கனவாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com