இன்னும் சற்று நேரத்தில் ஐசிசி உலககோப்பை போட்டி... முதல் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து, நியூசிலாந்து!

ICC MEN'S Cricket World Cup
ICC MEN'S Cricket World Cup

லகளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 13-வது ஐசிசி உலககோப்பை இன்று தொடங்கவுள்ளது. அஹமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி இன்று இரண்டு மணிக்கு தொடங்கவுள்ளது.

தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கப் போவது யார்?

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெறும் முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து சார்பாக பென் ஸ்டோக்ஸ் ஓப்பனராக இறங்கவுள்ள நிலையில் பயிற்சி ஆட்டத்தின்போது படுகாயம் அடைந்தார்.இதையெடுத்து அந்த அணியின் கேப்டன் பட்லர் , ஆட்டம் தொடங்குவதற்குள் ஸ்டோக்ஸ் குணமானால் நியூசிலாந்து எதிராக நடக்கவிருக்கும் போட்டியில் அவரே ஓப்பனர், இல்லையெனில் வேரு ஒருவரை களமிறக்குவோம் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணியிலிருந்து டாம் லாதம் ஓப்பனராக களமிறங்குவார் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

தொடக்க விழா ரத்தானது ஏன்?

பொதுவாக கொண்டாட்டங்களுக்கு பெயர்போன இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் ஐசிசி உலககோப்பை போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக பாலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் ,அர்ஜித் சிங், தமன்னா ,வருண் தவான், அஷ் போஸ்லே, சங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளும் மாபெரும் தொடக்க விழாவாக அக்டோபர் நான்காம் தேதி நடத்த பிசிசிஐ முடிவுசெய்தது. ஆனால் இறுதி நேரத்தில் எந்த தொடக்க விழாவும் இல்லை என்ற தகவல் வெளியானது. ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடக்க விழாவுக்கு பதில் கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது.இந்த பத்து அணியின் கேப்டன்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் புகைப்படம் எடுத்துகொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த விழாவை “கேப்டன்ஸ் டே”என்றும் அழைக்க ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடக்கும் போட்டி விவரம்:

இன்று நடைபெறும் ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு நாள் உலககோப்பை நடவிருக்கும் இடமான நரேந்திர மோதி மைதானம் 1,32,000 இருக்கைகளைக் கொண்டது. மேலும் இதைப்பற்றி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, என்னிடம் டிக்கட்டுகளை எதிர்ப்பார்க்க வேண்டாம் என்றும் டிக்கட் தீர்ந்தால் வீட்டிலையே இருந்து பார்க்கும்படி தனது நண்பர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.

ICC MEN'S World Cup
ICC MEN'S World Cup

இன்றைய போட்டியின் நடுவர்களாக குமார் தர்மசேனா ,நிதின் மேனான் ஆகியோர் முக்கிய நடுவர்களாகவும் மூன்றாவது நடுவாராக பால் வில்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய போட்டியை தொகுத்து வழங்கும் பொறுப்பு குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பட்டியல்:

இங்கிலாந்து அணியின் சார்பில், கேப்டனாக பட்லர் ,விக்கட் கீப்பராக ஜோனி பேர்ஸ்டோ, பேட்டராக மலன், ரூட், லிவிங்ஸ்டோன், பேட்டிங் அல்ரவுண்டாராக ஸ்டோக்ஸ் மோயின், பவுலிங் அல்ரவுண்டராக சாம் கரண்,கிறிஸ் வோக்ஸ்,வில்லே மற்றும் பவுலராக அடில் ரஷித்,மார்க் வுட்,ஹாரி ப்ரூக் ,கஸ் அட்கின்சன், டோப்லே ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில், கேப்டனாக லதம், விக்கட் கீப்பராக கான்வே, பேட்டிங் ஆல்ரவுண்டராக வில் யங், மிட்செல் , நீஷம் ,சாப்மேன், மற்றும் ரச்சின்.பவுலராக இஷ் சோதி,மேட் ஹென்ரி,போல்ட்,லாக்கி சவுத்தி,மற்றும் பவுலிங் ஆல்ரவுண்டராக சாண்ட்னர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com