இந்த நான்கு பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் உஷாராகதான் இருக்கவேண்டும்...ஏன் தெரியுமா?

அக் 14 இந்தியா-பாகிஸ்தான் போட்டி
இந்த நான்கு பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் உஷாராகதான் இருக்கவேண்டும்...ஏன் தெரியுமா?

சிசி உலககோப்பையில் இன்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடக்கவுள்ளது. அப்படியாக இன்று இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் உள்ள நான்கு முக்கியமான வீரர்களை பற்றி பார்ப்போம்.

பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசும் பாபர் அசாம்!

ஒரு நாள் போட்டிகளில் வெகு காலம் பேட்ஸ்மேன் தரவரிசைகளில் முதல் இடத்தில் இருந்த கோலியை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்தான் பாகிஸ்தானி அணியின் கேப்டன் பாபர் அசாம். 2022ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் 898 ரன்கள் எடுத்து தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்.

தினமும் பத்து மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் பாபர் அசாம் தனது 15 வயதிலேயே 19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான பாகிஸ்தான் அணியில் சேர்ந்தார். அப்போது நடைபெற்ற தேசியளவிலான போட்டியில் 213 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவானது என்றாலும் பேட்டிங்கில் யார் எப்போது சொதப்புவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதுபோன்ற நிலைமை எல்லா அணிகளிலும் உண்டு என்றாலும், பாகிஸ்தான் இந்த விஷயத்தில் அடிக்கடி சிக்கிக்கொள்வார்கள்.

Babar azam
Babar azam

ஆனால் அதனை பாபர் அசாம் உடைத்தெரிந்தார். 2012ம் ஆண்டு தனது முதல் கேப்டன்ஷீப்லேயே அண்டர் 19 தொடரில் 2 ஆயிரம் ரன்கள் மேல் எடுத்தார் சர்வதேச அளவில் கவனம்பெற்றார். 2015ல் தேசிய அணியில் அறிமுக ஆட்டதை ஆடிய பாபர் முதல் போட்டியிலையே அரைசதம் அடித்தார். 2016 ம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸிற்கு எதிரான போட்டியில் முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்போது நடைபெற்ற தொடரில் தொடர்ந்து இரண்டு சதம் அடித்து மைடன் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார். அந்த வருடம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தார். தனது அறிமுக ஆட்டங்களிலேயே சதம், அரைசதம் அடித்த இவர் 2019 ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.பிறகுதான் இவரின் அசுர வளர்ச்சி சொல்ல முடியாத அளவுக்கு சென்றது.

சதங்களின் ஜாம்பவன் சாகித் அஃபிரிடி:

1994 – 1995 ம் காலகட்டதிதில் பாகிஸ்தானில் லெக் ஸ்பின் பவுலர் இருப்பதே கடினமான நேரத்தில் லெக் ஸ்பின் பயிற்சி எடுத்து தனக்கான இடத்தை பிடித்தவர் தான் அஃபிரிடி. பாகிஸ்தானில் நடக்கும் காயிதி அசாம் டிராஃபி தொடரில் ஐந்து போட்டிகளிலையே 42 விக்கெட்டுகளை எடுத்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அஃபிரிடி இருந்தார். இந்த ஒரு போட்டியே தேசிய அணி பார்வையை அஃபிரிடி மீது திருப்பியது. தனது 14 வயதில் அண்டர் 19 தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பின் 1996 ல் தேசிய அணிக்காக கென்யாவுக்கு எதிரான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த போட்டி முடிந்த கையோடு பயிற்சி நேரத்தின்போதுதான் முதன்மை வீரர் வசிம், அஃபிரிடிடம் ஒரு தனித்திறமை உள்ளது என்று கண்டுப்பிடித்தார். அடுத்த போட்டியிலயே அதனை சோதித்து பார்த்தார் வசிம். அஃபிரிடை டாப் பேட்ஸ்மேனாக இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இறக்கியதில் வெறும் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்தார். தற்போதுவரை அஃபிரிடி இந்த சாதனை எந்த நாட்டு வீரரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1999 முதல் 2003 வரை எவராலும் எளிதாக எதிர்க்கொள்ள முடியாத பேட்ஸ்மேனாக ஆனார்.

Shahid Afridi
Shahid Afridi

பிறகு 2005 ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஓப்பனராக களமிறங்கிய அஃபிரிடி வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து கம் பேக் கொடுத்தார். 2011 உலக கோப்பையில் வெறும் 9 போட்டிகளில் 21 விக்கெட் எடுத்தார். இப்படி பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் மாறி மாறி தனது முத்திரையை பதித்த இவர்தான் சிக்ஸரை வெகு தூரம் அடித்த முதல் கிரிக்கெட்டர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார்.

விக்கெட்களின் நாயகன் ஹசன் அலி!

வலதுகை மிதவேக வீரரான ஹசன் அலி அக்டோபர் 10 ம் தேதி நடந்த இலங்கை எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 4 விக்கெட் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார். உள்நாட்டு விளையாட்டுகளிலும் சரி அண்டர் 19லும் சரி முதல் போட்டிகளில் நன்றாக விளையாடிய இவரின் விளையாட்டில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு, 2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

Hasan Ali
Hasan Ali

இந்த தொடரின் இந்தியாவுக்கு எதிராக 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியை வீழ்த்தினார். இதுவே அவரின் பெரும் கம்பேக்காக அமைந்தது. இந்தியாவில் எப்படி கேதவர் ஜாதவோ அதேபோல் ஹசன் ஆனார். ஆனால் அவர் சிறிதும் தளரவில்லை அணியும் அவரை விட்டுக்கொடுகாமல் இருந்தது. அதுவே ஹசன் அலி வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்றே கூறலாம்.

அசுர பேட்ஸ்மேன் ரிஸ்வான்:

வலது கை பேட்ஸ்மேனான ரிஸ்வான் ஒரு அசுர பேட்ஸ்மேன் என்றே கூறலாம். சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான உலககோப்பை போட்டியில் 121 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடினார். பாகிஸ்தான் சூப்பர் லீகில் 71 போட்டிகளில் இதுவரை 1,996 ரன்கள் எடுத்துள்ளார். கொரோனா காலம் முடிந்த பின்னரும் சில கட்டுப்பாடுகளுடன் நடந்த போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 161 ரன்கள் மற்றும் இரண்டு அரைசதம் அடித்தார்.

ரிஸ்வானும் பாபர் அசாமும் சேர்ந்தால் எதிரணி கதி கலங்கித்தான் நிற்கவேண்டும். அந்தளவுக்கு இவர்கள் இருவரின் பாட்னர்ஷிப் ரொம்ப ஸ்ட்ராங். 2021ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், ரிஸ்வானும் பாபர் அசாமின் பாட்னர்ஷிப்பில் 191 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 28 டெஸ்ட் போட்டிகளில்1,423 ரன்களும் 67 ஒருநாள் போட்டிகளில் 1,892 ரன்களும் 85 டி20 போட்டிகளில் 2,797 ரன்களும் எடுத்துள்ளார்.

Rizwan
Rizwan

எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடுவது ஒரு அணிக்கு ஒரு தீப்பொறியிலான தன்னம்பிக்கையை அளிக்கும். அந்த தீப்பொறிய வைத்துக்கொண்டு களத்தில் யார் ஆட்டத்தை புரிந்துக்கொண்டு வெற்றியை நோக்கி விளையாடுகிறார்களே அவர்களே வெற்றிபொறுவார்கள். இதனை நம்முடைய இந்திய அணி வீரர்கள் உள்வாங்கியுள்ளார்களா என்பது இன்று நடைபெறும் போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com