இந்தியா vs நெதர்லாந்து ஆட்டம் மழையால் ரத்து!

India vs Netherlands
India vs Netherlands

ஆசிய கோப்பைக்கு முன்னதாக நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து இடையிலான போட்டி மழையின் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்துச் செய்யப்பட்டது.

நெதர்லாந்து எதிரான பயிற்சிப் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்தது. ஆனால், இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக ஆட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், விட்டுவிட்டு மழை பெய்ததன் காரணமாக இரண்டு மணி நேரம் காத்திருந்த அணியினர் ஆட்டத்தை கைவிட்டனர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 90 ரன்கள் எடுத்தும் வீணானது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 352 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணிக்கப்பட்ட ஓவர்களில் 337 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டியில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தான், நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com