பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதில் இஷான்கிஷன்!

Kl rahul Ishan Kishan
Kl rahul Ishan Kishan

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் கே.எல்.ராகுல் விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். அவரே விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க இருக்கிறார்.

ஏற்கெனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன், சுபம் கில்லுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் நடந்த மூன்று போட்டிகளில் மொத்தம் 184 ரன்களை எடுத்துள்ளார் கிஷன். அதாவது மூன்று போட்டிகளிலும் முறையே 52, 55 மற்றும் 77 ரன்களை எடுத்துள்ளார். அதாவது சராசரியாக 61.33 ரன்களை எடுத்துள்ளார் அவர்.

ஆனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது நடைபெற உள்ள போட்டியில் ரோகித் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளதால்,  அவர் ஆட்டத்தை தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குகிறார்.

கடந்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இஷான் தொடக்க ஆட்டக்கார்ராக களம் இறங்கி இரட்டை சதம் எடுத்த்து நினைவிருக்கும்.

இஷான் கிஷானை தொடக்க ஆட்டக்கார்ராக களம் இறக்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். அவர் தனது ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுப்பார் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்கார்ராக களம் இறங்கினால், சுபம் கில் 3-வதாகவும், விராட் கோலி 4 ஆம் நிலை ஆட்டக்கார்ராகவும் களம் இறங்க நேரிடும். அதாவது , ஸ்ரேயாஸ் ஐயர் 5-வதாக களம் இறங்க நேரிடும். அப்படியிருக்கும்பட்சத்தில் ஹர்திக் பாண்டியா 6-வது ஆட்டக்கார்ராக களம் இறங்குவார்.

இந்த சூழலில் சூரியகுமார் யாதவ் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. ஒருவேளை சூரியகுமார் அணியில் இடம்பெற வேண்டுமானால் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படுவது தாமதமாகலாம் என்று சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com