சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா - டக்வொர்த் முறையில் அயர்லாந்தை வென்றது இந்தியா!

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா - டக்வொர்த் முறையில் அயர்லாந்தை வென்றது இந்தியா!

அயர்லாந்துக்கு எதிரான டி-20 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6.5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் முறையில் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. ஜெய்வால் 24 ரன்களும், ருதுராஜ் கெய்கெட் 19 ரன்களும் எடுத்திருந்த நிலையில் இந்தியா 6.2 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் அயர்லாந்தின் கிரெய்க் அபாரமாக பந்து வீசி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டானார்.

இந்திய அணியின் துணை கேப்டன் ருதுராஜ் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை எடுத்தார். இந்த நிலையில் மழையால் ஆட்டம் நின்றது. எனினும் அயர்லாந்து அணியைவிட இந்தியா 2 ரன்கள் கூடுதலாக எடுத்து 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்ததால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ராவும், பிரதிஷ் கிருஷ்ணாவும் சிறப்பாக பந்து வீசி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் சரிவிலிருந்து அயர்லாந்து அணியை தமது அதிரடி ஆட்டத்தால் மெக்கார்த்தி தூக்கி நிறுத்தினார். அவர் கடைசிவரை அவுட்டாகாமல் 51 ரன்கள் குவித்தார். இறுதியில் அயர்லாந்து 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சிகிச்சைப் பெற்று 11 மாதங்கள் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சிறப்பாக பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரதீஷ் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் ரவி விஷ்ணோய் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

முன்னதாக டாஸ் வென்ற பும்ரா, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய அயர்லாந்து அணி, ஒரு கட்டத்தில், 11 ஓவர்களில் 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும் கர்டிஸ் காம்பர் (39) மற்றும் மெக்கார்த்தி இருவரும் சிறப்பாக நின்று ஆடி அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். அயர்லாந்து அணியில் மெக்கார்த்தி மட்டும் அபாரமாக விளையாடி 51 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com