ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகினார் லிட்டன் தாஸ்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகினார் லிட்டன் தாஸ்!

சியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இன்று பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றிலிருந்து அடுத்த மாதம் 17ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் நாட்டின் முல்தானி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் நாடுகள் இடையே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வங்க தேச அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டு இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே வைரஸ் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் லிட்டன் தாஸ். அவருக்குப் பதிலாக நேபாளம் நாட்டின் மற்றொரு விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேன் அனாமுல் ஹக் பிஜோய் மாற்றப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து வங்க தேச கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் தலைவர் மின்ஹாஜுல் அபேடின், “வங்க தேச கிரிக்கெட் அணியுடன் அனாமுல் ஹக் இன்று இணைகிறார். துரதிர்ஷ்டவசமாக, லிட்டன் தாஸ் ஆசிய கோப்பையை தவறவிட்டார். அவருக்கு பதிலாக அனாமுல் ஹக்கிற்கு வாய்ப்பு கொடுத்தோம். அனாமுல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் எப்போதும் நம் பார்வையில் இருக்கிறார். லிட்டன் இல்லாமல் போனதால், விக்கெட் கீப்பிங் செய்யும் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டார்” என்று கூறி இருக்கிறார்.

இதுவரை 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள அனாமுல் ஹக் 1,254 ரன்கள் எடுத்துள்ளார். 30 வயதான அனாமுல் கடைசியாக வங்கதேச அணிக்காக 2022 டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார். நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வங்க தேசம் தனது முதல் ஆட்டத்தில் நாளை இலங்கையை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com