உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

 நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

ங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக அதலெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீர்ர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். மொத்தம் 88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்தார். சர்வதேச அதலெடிக் போட்டியில் இந்திய வீர்ர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

டையமண்ட் டிராபி மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இப்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அதலெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மூன்றாவது பத்தகமாகும் இது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்றார்.

நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி 88.17 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.

பாகிஸ்தான் வீர்ர் அர்ஷத் நதீம் முதல் முறையாக இந்த போட்டியில் பங்கேற்று 87.82 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜாகப் வாட்லிஜெக் 86.67 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, நேற்றைய போட்டியில் முதல் வாய்ப்பை தவறவிட்டார். அவர் போட்டியில் பதக்கம் வெல்வாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நீரஜ் சோப்ரா, வச்ச குறி தப்பாமல் தங்கத்தை தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் 12 பேர்களில் ஒருவராக இடம்பெற்ற இந்தியரும், ஆசிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான  டி.பி. மனு 84.14 மீட்டர் தொலைவு வீசிய போதிலும் 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. மற்றொரு இந்தியரான கிஷோர் ஜேனா, 84.77 மீட்டர் தொலைவு வீசி 5-வது இடத்தைப் பெற்றார்.

உலக அதலெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் மூன்று இந்திய வீர்ர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com