மூன்றாம் இடம் யாருக்கு? இன்று ஸ்வீடன் - ஆஸ்திரேலியா மோதல்!

sweden vs australia
sweden vs australia

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்தை பிடிப்பதற்காக ஸ்வீடன்- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் இத்துடன் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஸ்வீடன் 2 வெற்றிகளைப் பெற்றிருக்க,  ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

இரண்டு அணிகளிலும் ஸ்வீடன் சற்று பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. 2016 மற்றும் 2020 ஓலிம்பிக்ஸ், 2003 உலகக் கோப்பை ஆகியவற்றில் போராடி வீழ்ந்து இரண்டாவது இடத்தை பிடித்தது ஸ்வீடன்.

உலகின் 3 ஆம் நிலை அணியான ஸ்வீடன், ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டியில் 3 ஆம் இடத்துக்கான போட்டியில் மூன்று முறை வென்றுள்ளது.

இன்றைய போட்டி ஸ்வீடன் வீராங்கனை கரோலின் செகருக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். ஸ்வீடனுக்காக 5 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இன்று 21 வது முறையாக களம் இறங்குகிறார். இதன் மூலம் அவர் உலகக் கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற ஸ்வீடன் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஸ்வீடனுக்காக கரோலின் செகர், அதிகபட்சமாக 235 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

மறுபுறம் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா 3-வது இடத்தை பிடித்த பெருமையுடன் போட்டியை நிறைவு செய்யும் முனைப்பில் உள்ளது. சொந்த மண்ணின் ரசிகர்கள் அளிக்கும் பேராதரவுடன் உள்நாட்டில் விளையாடுவதும், நட்சத்திர வீராங்கனை சாம் கெர் மீண்டும் களம் காண்பதும் அந்த அணிக்கு சாதமாக உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியை ஸ்பெயின் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com