மழையால் இறுதிப் போட்டி தடைபட்டது: தொடரை இந்தியா 2-0 என வென்றது!
இந்தியா-அயர்லாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் டி-20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் தடைபட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
அயர்லாந்துடன் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாட இருந்த நிலையில் ஒரு போட்டி மட்டுமே, அதாவது 2-வது ஒருநாள் போட்டி மட்டுமே முழு அளவிலை நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வேட் அரைசதம் எடுத்தார். ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே சிறப்பாக ஆடி அணியில் ஸ்கோரை 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என உச்சத்துக்கு கொண்டு சென்றனர். ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரதீஷ் கிருஷ்ணா இருவரும் சிறப்பாக பந்து வீசினர்.
எதிரணியில் அயர்லாந்து வீரர் ஆண்ட்ரூ அதிரடியாக ஆடி 51 பந்துகளை எதிர்கொண்டு 72 ரன்கள் குவித்தார். ஆனாலும், இந்திய அணி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களத்தில் இறங்கியது. எனினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. எனினும் 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்த நிலையில் டக்ளஸ் லீவில் முறையில் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பலமுறை ஆடுகளத்தை சோதனையிட்ட நடுவர்கள் முதலில் ஆட்டத்தை மூன்று மணி நேரம் தள்ளிவைத்தனர்.
இந்த தொடரில் காயமடைந்திருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்று பிரதீஷ் கிருஷ்ணா அணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மூத்த வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா, இளம் ஆட்டக்காரர்கள் கொண்ட இந்திய அணிக்கு தலைமை வகித்தார். வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக இந்த ஒருநாள் போட்டி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்களின் ஆட்டத்திறனை கணிக்கும் வகையில் இந்த போட்டிகள் அமைந்திருந்தன.