
யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 7 ஆம் நிலை ஆட்டக்காரரான கரோலின் கிரேசியா, சீனாவின் வாங் வாஃபன்னிடம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். பிரெஞ்சு வீராங்கனையான கிரேசியாவை வீழ்த்த சீனாவின் வாங் வாஃபனுக்கு 70 நிமிடங்களானது.
யு.எஸ். சாம்பியன்ஷிப் போட்டியில் மரியா சக்காரிக்கு அடுத்து இரண்டாவதாக தோல்வியை சந்தித்துள்ள முன்னிலை ஆட்டக்காரர் கிரேசியா என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வீர்ர்களும் நேர் செட்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். சீன வீராங்கனைக்கு எதிரான ஆட்டத்தில் கிரேசிய 34 முறை செய்த தவறுகள் அவரது தோல்விக்கு முக்கிய காரணமாகும்.
கிரேசியா 18 முறை சிறப்பான ஆட்டத்தை தந்தபோதிலும் அவரால் சீன வீராங்கனைக்கு எதிரான போட்டியில் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. கடுமையாக போராடிய போதிலும் கிரேசியா தோல்வியையே தழுவினார். இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை வாஃபன் கதி பெளல்டரை சந்திக்கிறார்.
நடப்பு விம்பிள்டன் சாம்பியன் மார்கிடா வோண்ட்ரஸோவா, தென்கொரி வீராங்கனை ஹன் நா –லாவை 6-3, 6-0 என் செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த இருவரிடையிலான ஆட்டத்தில் பெரும்பாலும் வோண்டரஸோவின் கையே ஓங்கியிருந்த்து.
ஆடவர் ஒற்றையர் போட்டியில் கேமரூன் நோரி, ரஷியாவின் அலெக்ஸாண்டர் அலேக்சாண்டோவிக் ஷெவ்சென்கோவை 6-3, 6-2 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.