யு.எஸ்.ஓபன்: தகுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்!

Iga Swiatek
Iga SwiatekImg Credit: CNN

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நெ.1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக், காஜா ஜுவானை 6-0, 6-1 என்ற நேர் செட்டுகளில் வென்று தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதனிடையே இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, கஜகஸ்தான் ஜோடி ஆண்ட்ரே கொலுபவ் மற்றும் ரோமன் ஸஃபியுல்லின் ஜோடியை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஸ்வயாடெக் சக வீராங்கனையும் நண்பருமான காஜா ஜுவானை 6-0, 6-1 என்ற செட்கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இருவரிடையிலான ஆட்டம் 49 நிமிடங்களில் முடிந்தது. இருவருமே குழந்தை பருவத்திலிருந்தே நண்பர்கள் மற்றும் ஒன்றாக டென்னிஸ் பயிற்சி பெற்றவர்கள்.

காஜா ஜுவானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே ஸ்வயாடெக்கின் கைதான் ஓங்கியிருந்த்து. முதல் செட்ட ஸ்வயாடெக் எளிதில் வென்றார். சர்வீஸில் 3 புள்ளிகளை மட்டுமே அவர் இழந்தார். இரண்டாவது செட்டிலும் ஸ்வயாடெக் சிறப்பாக ஆடி 11 புள்ளிகளை எதிர்ப்பின்றி பெற்றார்.

சுமார் 40 நிமிட ஆட்டங்களுக்குப் பிறகே ஜுவானுக்கு பாயின்ட் கிடைத்தது. எனினும் ஸ்வயாடெக் ஆட்ட முடிவில் அவரை எளிதில் வென்றார். அவரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார் ஜுவான்.

எனது சகோதரியுடன் விளையாடுவதுபோல் உணர்ந்தேன். எனினும் போட்டியென்று வந்துவிட்ட பிறகு ஆட்டத்தில்தான் எனது முழு கவனமும் இருந்தது என்று வெற்றிபெற்ற பின் ஸ்வயாடெக் கூறினார்.

இதனிடையே ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா- எப்டென் ஜோடி, இரண்டாவது சுற்றில் கொலுபெவ்-ஸஃபியுல்லின் ஜோடியை 6-3,6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

முதல் சுற்று ஆட்டத்தில் போபண்ணா- எப்டென் ஜோடி ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ’கன்னெல் மற்றும் அலெக்ஸாண்டர் வியுகிக்கை வென்றிருந்தது. 43 வயதான இந்தியரான போபண்ணா, சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் எப்டெனுடன் சேர்ந்து  அரையிறுதியை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் 7-வது இடத்தை பெற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com