யு.எஸ்.ஓபன்: ஜோகோவிச், கரோலினா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்!
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் பெர்னபி ஸபாடா மிராலஸை 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்டுகளில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் வெற்றிபெற இரண்டு மணிநேரம் மட்டுமே தேவைப்பட்டது.
தொடக்கத்தில் ஜோகோவிச் சற்று பின்தங்கினாலும் பின்னர் அடுத்த இரண்டு செட்களில் அவர் ஆட்டத்தை தனதாக்கிக் கொண்டார். மிராலெஸ்ஸுக்கு ஜோகோவிச்சின் சர்வீசை முறியடிக்க ஆறு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் அதை அவர் தவறவிட்டார். ஆனால், ஜோகோவிச் 11-இல் 6 பிரேக் பாயின்டுகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.
ஜோகோவிச் மற்றும் மிராலெஸ் இருவரும் 22 தவறுகளை செய்தனர். ஆனால், ஜோகோவிச் சமாளித்து ஆடி வெற்றியை நிலைநாட்டினார். 36 வயதான ஜோகோவிச் அடுத்து சகநாட்டு வீர்ரான லாஸ்லோ ஜெரேவை மூன்றாவது சுற்றில் சந்திக்க இருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் போட்டியில் 2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரன்னர் இடத்தை பெற்ற கரோலினா முசோவா, மெகதிலினாவை 6-3, 6-3 என்ற நேர் செட்டுகளில் வென்றார். இருவருக்கும் இடையிலான இந்த போட்டி ஒரு மணி மற்றும் 19 நிமிடங்களில் முடிவடைந்தது. அவர் 16 தவறுகளை செய்தார். எனினும் மெகதிலினாவைவிட குறைவான தவறுகளையே அவர் செய்தார். தொடக்கத்திலிருந்தே கரோலினா முசோவாவின் கை ஓங்கியிருந்தது.
கரோலினா, ஒருமுறைகூட மெக்தலினாவுக்கு சர்வீசை முறியடிக்க வாய்ப்பு தரவில்லை. முசோவா தனக்கு கிடைத்த நான்கு பிரேக் பாயின்டுகளில் மூன்றை சாதகமாக்கிக்கொண்டார். முதல் சர்விலேயே அவர் அதிக புள்ளிகளை வென்றார்.
கரோலினா முசோவா, அடுத்து அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்டாவை சந்திக்கவிருக்கிறார்.