மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 போட்டி

Womens Cricket
Womens Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 போட்டி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மலேசியா, யூஏஇ ஆகிய 7 அணிகள் பங்கேற்கிறது.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை உடன் தற்போது திரும்பி உள்ளதால் இந்திய மகளிர் அணி மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

யுஏஇ மற்றும் மலேசியா தகுதி சுற்றில் வென்றதை அடுத்து ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை மகளிர் ஆசிய கோப்பை தொடர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Asia Cup
Asia Cup

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போட்டியில் வங்கதேசம், தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டத்தில் அக்டோபர் 2 இந்தியா ,இலங்கை அணிகள் மோதுகிறது.

இதனை தொடர்ந்து அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது .

அக்டோபர் 4 ஆம் தேதி இந்திய அணி , யுஏஇ அணியுடன் மோதுகிறது .

அக்டோபர் 7ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்துடன் பலப் பரிட்சை நடத்துகிறது.

அக்டோபர் 10ஆம் தேதி இந்திய அணி தாய்லாந்துடன் எதிர்கொள்கிறது.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கவும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் நுழைந்து கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com