0,00 INR

No products in the cart.

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர்
ஸ்ரீ ஆஞ்சனேயர்
. இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.

l தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோயிலில், அனுமாரின் வாலில் நவக்கிரகங்கள் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. சொந்த வீடு வாங்க, இவரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அமாவாசைதோறும் மூலை அனுமாரை, ‘ராம நாமம்’ கூறி வலம் வந்து, சிதறு தேங்காய் உடைப்பது பக்தர்களின் வழக்கம். 18 அமாவாசைகள் தொடர்ந்து இவ்வாறு வழிபட, நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

l மார்கழி மைந்தன்’ எனப் போற்றப்படும் அனுமன் வானில் பறந்து, இலங்கை சென்று சீதா தேவியைக் கண்டவர் எனப் புராணம் கூறுகிறது.

l மகாராஷ்டிரா மாநிலம், நான்தோரா’ என்ற தலத்தில் 110 அடி உயரத்தில் அனுமன் காட்சி தருகிறார்.

l திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடிவாரத்தில் சின்னாளப்பட்டி காந்தி கிராமத்தில் பதினாறு அடி உயர அனுக்ரஹ மூர்த்தியாக விஸ்வரூப ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இங்கு பதினாறு வகை அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆஞ்சனேயரை வழிபட்டால் வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.

l மதுரை மாவட்டம், ஆனையூர் எனும் சிற்றூரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் அனுமனின் தாய் அஞ்சனா தேவிக்கு தனி சன்னிதி உள்ளது. தேவியின் இடதுபுறம் அவரது தோழியும், வலதுபுறம் குழந்தை வடிவில் அனுமனும் காட்சி தருகிறார்கள்.

l சிம்லா, ஜக்குமலை பகுதியில் உயரமான ஆஞ்சனேயர் சிலை திறந்தவெளியில் நிறுவப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த பிறகு, அனுமன் ஜக்கு மலையில் ஓய்வு எடுத்தாராம். அதன் நினைவாக இங்கு ஆஞ்சனேயருக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

l மதுரை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் உள்ள ஸ்ரீசுயம்பு அனுமனை பக்தர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் வழிபட, நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறதாம். சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.வடை, துளசி, வெற்றிலை மாலைகள் இவருக்குச் சாத்தப்படுகின்றன.

l கேரள மாநிலம், ஆலத்தியூரில் உள்ள ஆஞ்சனேயர் கோயில், வசிஷ்ட முனிவரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகும். இரவில் ஆலத்தியூர் அனுமன் பெயரை உச்சரித்தவாறே படுத்தால் அமைதியான தூக்கம் தழுவுமாம்.

l கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள கூகலூரில் ஆறடி உயரத்தில் கருங்கல் சிற்பமாக ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இவரது கூப்பிய கரங்களில் சிவலிங்கத்தை ஏந்தியவாறு, காட்சி தருவது அபூர்வ அமைப்பு. பில்லி, சூனியத் தொந்தரவுகளை இவர் போக்குவதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

l ராமேஸ்வரத்தில் அனுமன் தீர்த்தத்துக்கு அருகே எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபய ஆஞ்சனேயரின் உருவம் அத்தி மரத்தாலானது. அனுமத் ஜயந்தி அன்று இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

l அமெரிக்கா, கலிஃபோர்னியா மாகாணம் லிவர்மோர் என்ற இடத்திலுள்ள சிவா விஷ்ணு கோயிலில் பதினான்கு அடி உயரத்தில் கூப்பிய கரங்களுடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் அனுமன் காட்சி தருகிறார்.

l ஆந்திர மாநிலம், குண்டூர் அருகில் உள்ள பொன்னூரில் 25 அடி உயரமுள்ள அனுமன், 30 அடி உயரமுள்ள கருடாழ்வார் ஒரே சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர்.

l கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் உள்ள மாருதிகஜானன் கோயிலில் முதல் நாள் அனுமனுக்கும் கணேசருக்கும் சாத்திய பூமாலைகளை உதிர்த்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

l பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றான சென்னை ஞாயிறு கோயிலின் வெளியே சுதர்சனர் சன்னிதியில் ஐந்தடி உயரமுள்ள ஸ்வர்ண ஆஞ்சனேயர் தரிசனம் தருகிறார்.

l பூரி ஜகந்நாதர் கோயிலின் தட்சிண வாயில் வழியாக உள்ளே சென்றால், ஆஞ்சனேயர் 15 அடி உயரத்தில், கிரீடம் அணிந்து, பட்டுத் துணி உடுத்தி தரிசனம் தருகிறார்.

l கிருஷ்ணதேவராய மன்னரின் அரச குருவாகத் திகழ்ந்த மகான் வியாசராஜர், ஆஞ்சனேய பக்தர். அவர் 732 ஆஞ்சனேயர் வடிவங்களை ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த ஆஞ்சனேயரின் வாலில் மணி காணப்படுவது சிறப்பு.

l நாகை மாவட்டம், அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் அனுமன் மூன்று கண்கள், பத்து கைகளுடன் காட்சி தருவது சிறப்பு.

l மகாராஷ்டிரா மாநிலம், ‘பத்ரா’ எனும் இடத்தில் ஆஞ்சனேயர் சயனக் கோலத்தில் தரிசனம் தருகிறார்.

l கர்நாடக மாநிலம் கோலாரில், ‘முளுபாகல்’ எனும் தலத்தில் அருளும் ஆஞ்சனேயருக்கு துளசி மாலைக்குப் பதில், தாழம்பூ மாலை அணிவிக்கிறார்கள்.

l கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமசாமி கோயிலில் ஸ்ரீராமர் முன்பு காட்சி தரும் அனுமன் சற்றே தலை குனிந்து, வலது கையை மடக்கி, வாய் பொத்தி நிற்க முயலும் பாவனையில் பவ்யமான கோலத்தில் காட்சி தருகிறார்.

தொகுப்பு : எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...

சாம்பிராணி தூபக் கடாட்சம்!

- ஏ.எஸ்.கோவிந்தராஜன் சாம்பிராணி புகை போடுவது என்பது, வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாகக் கருதப்படுகிறது. சாம்பிராணி புகையானது, ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும். அதனால்தான் நமது முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும்...