Other Articles
“குட்டிப் பையனின் வேண்டுகோள்
ஜெயா சம்பத்
" பள்ளி சென்று பாடம்
படிக்க ஆசையாக இருக்கு..
நண்பர்களுடன் கை கோர்த்து
தட்டாமாலை சுற்ற ஏக்கமாக இருக்கு..
முகக் கவசம் அணியாமல்
மூச்சு விடும் இனிய நாள் எப்போது..?
ஏய்... முள்ளுருண்டைக் கிருமியே......
உலகத்தை விட்டு உடனே மறைந்து விடு..
எங்களை ...
தனித்திரு மனிதருக்கே தத்தைக்கல்ல!
வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.
விழுந்த மரங்களில் விலாசத்தை தேடுகின்றாயோ?! இலவமரங்கூட இத்துப்போய் நாளானதே - இனி இதயத்தை தொலைக்கக்கூட ஏது வழி?! மானிடர் தரும் அதிர்வைவிட மின்சாரம் தந்து விடப் போவதில்லை யென...
நிலவுக் கன்னி
வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.
இரவுக் காதலருடன் உலவியத் தடயங்கள் கொத்துக்கொத்தாய் சிதறிய( பனி) முத்துப் பறல்கள் கோர்க்க கண்டெடுத்தபோது காணாமல் போனதே(ன்) மாத்திரை ப் பொழுதில் களவாடிய கதிரவன்?!!!! கண்டெடுத்தால் சொல்லுங்கள் தோழி!!...
புகைப்பட கவிதை
வேஷம்!
பத்மா முரளி.
அனுமன் வேடமிட்டு.
ஆட்டம் போட்டாலும்,
அரை வயிறு நிரம்ப
அயராது உழைக்கணும்..
அயர்ந்து நின்றால்
புகைப்படமாய் சிரிக்கணும்!
பாட்டி பேரன் பாசம்!
Hemalatha Srinivasan
குட்டிக்கண்ணா.. குழந்தை வடிவே
குலக் கொழுந்தே.. குதூகலத்தின் ஊற்றே!
என்முகம் வாடினால் பொறுக்கமாட்டாய்.
நீ கண்கலங்கினால் நான் பொறுக்கமாட்டேன்
பெற்றோர் உன்னைக் கடிந்தால்
நீ தஞ்சம் புகுவது என்னிடமன்றோ!
உன் அபரிமிதமான ஆங்கிலமும்
அனைத்தையும் நொடியில் புரிந்துகொள்ளும் உன் ஆற்றலும்
நான் வியக்காத...