டி-20 நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!

டி-20 நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான யடி-20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் இன்று தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி தலைமையில் இரு அணிகளும் மோதவுள்ளன.

இதுகுறித்து இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஐசிசி முடிந்த பிறகு நான் டி20போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட்கோலி முன்பே அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு ஓய்வு தேவை என்பதால்தான் நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்கவில்லை. துபாயில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இப்போதுதான் நடந்து முடிந்துள்ளது. அதனால்

இந்த டி20 போட்டியில் ஆரோக்கியம் கருதி, சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை பல புதிய வீரர்கள், அதாவது சையத் முஸ்தக் அலி கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ரோஹிட் சர்மா கூறினார். நியூஸிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் விவரம் ;

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்) , ருதுராஜ் கெய்க்வாட் , வெங்கடேஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், தீபக் சஹார், முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com