டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கிந்திய அணி அரையிறுதிக்கு தகுதியிழப்பு!

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கிந்திய அணி அரையிறுதிக்கு தகுதியிழப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணி 189 ரன்களைக் குவித்து வெஸ்ட் இண்டீஸை வென்றது. இதன் மூலம் அரையிறுதி இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது..

இப்போதைய நிலையில் பிரிவு ஏ–யில் இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடந்த அறையிறுதிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியின் பதும் நிசாங்கா 41 பந்துகளில் 51 ரன்கள் விளாச, சரித் அசலங்கா 48 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இலங்கை அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து வெஸ்டிண்டீஸ் அணி வெளீயேறியது.

logo
Kalki Online
kalkionline.com