
துபாயில் நடந்து வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் அடுத்ததாக 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், ஷாகீன் ஆரம்பத்திலேயே அடுத்து வந்த வீரர்ளும் சீக்கிரமே அவுட் ஆயினர். இதனால் பாகிஸ்தான் முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னிஸ், மற்றும் மேத்யூ வேட் ஆகிய இருவரின் ஆட்டம், விளையாட்டின் போக்கை மாற்றியது. கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாகீன் அப்ரிடி வீசிய 19-வது ஓவரில், மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சர் அடித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம், ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இந்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோத உள்ளது. உலக கோப்பையை வெல்லப் போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.