
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிவகங்கை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதி காளிதாஸ் கேரள சிறையில் இருக்கும் நிலையில், சிவகங்கையில் உள்ள அவரின் சகோதரர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இன்று தமிழகம், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப் பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.