தமிழக மீனவர்களின் 105 படகுகள்: இலங்கை கடற்படை ஏலம்!

தமிழக மீனவர்களின் 105 படகுகள்:  இலங்கை கடற்படை ஏலம்!

நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கப் சென்றபோது, இலங்கை கடற்படையினர் அவர்களை கது செய்து, அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த 105 விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாகை மீனவர்கள் குறிப்பிட்டதாவது;

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது வருகிறது. பின்னர் சில காலம் சிறைவாசத்துக்குப் பின் மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட, அவர்களுக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நாட்டு படகு உள்ளிட்ட 105 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது. இந்நிலையில் தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளையும் இலங்கை அரசு அரசுடமையாக்கியதுடன்  அவற்றை 5 நாட்கள் ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில, முதல்நாளான இன்று இலங்கை காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 65 விசைப்படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தந்த துறைமுகங்களில் இருந்து ஏலம் விடப்படுகிறது.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகளை இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்டமாக கோரிக்கை வைத்த நிலையில் படகுகள் இன்று ஏலம் விடப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com