
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும்.
ரோஹிணி: நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7