
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் பெய்த கன மழை காரணமாக தலைமைச் செயலகத்தில் உள்ள மிக பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அச்சமயம் அங்கு பணியிலிருந்த பெண் போக்குவரத்து காவலர் கவிதா (வயது 31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பணியிலிருந்த போக்குவரத்து தலைமை காவலர் முருகன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 கார்கள் மற்றும் 10 இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.