தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தள்ளிவைப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தள்ளிவைப்பு!
Published on

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்று தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தள்ளிவைத்தார்.

நேற்று முன்தினம் (ஜனவரி 5) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் துவங்கியது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் இக்கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டும் நடத்த் முடிவெடுத்ததாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கேள்வி நேரம் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. நேரலையின்போது முதல் கேள்வியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி கேட்க முதல்வர் மு..ஸ்டாலின் பதிலளித்து துவக்கி வைத்தார்.

சடப்பேரவைக் கூட்டத் தொடரின் 2-ம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இந்தக் கூட்டத்தொடரில், டிஎன்பிஎஸ்சி சட்டத் திருத்த மசோதா, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com