தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் வீடுகளுக்கே சென்று 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது;

சென்னையில் 'இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர் இதனால் கொரோனா தொற்று அதிகரிக்குமா என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் தெரிய வரும். அந்த பாதிப்புக்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முதல்வரின் ஆலோசனைப்படி செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com