தமிழகத்தில் 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு:  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறீத்து சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவல்;

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்புண்டு.. திருவள்ளூர் மர்றும் அதைச் சுற்றீயுள்ள மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இவ்வாறூ சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை தொடர்ச்சியாக பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com