தமிழகத்தில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்றைய தினம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ததுஅதேபோல் தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளீயிட்டுள்ள அறிக்கை:


தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும். 30, 31ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு.. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

அக்டோபர் 31-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடலோர பகுதி, கேரள கடலோரப் பகுதி,தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 – 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்ப்டுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com