தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: மேலும் சில கட்டுப்பாடுகள் அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: மேலும் சில கட்டுப்பாடுகள் அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்..

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. ஆனால் அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள்,மருந்தகங்கள்,பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்தி,.டி.எம்,சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விதிக்கப்பட்டுள்ள மேலும் சில விதிமுறைகள்:

இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். அவை:

  • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படும்.
  • உற்பத்தி தொழிற்சாலைகள்,தகவல் செயல்பட தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணியாளர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
  • வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்
  • அன்று பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது. மேலும் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
  • முழு ஊரடங்கு மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக அனுமதிக்கப்படும். ஆனால் பயணச்சீட்டுவைத்திருக்க வேண்டும்.
  • ஜனவரி 20-ம் தேடி வரை மழலையர் காப்பகங்கள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப் படுகிறது.ஆனால்,பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
  • பொழுதுபோக்கு,கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை. கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. அரசு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல்,கலை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும்.
  • பேருந்து,மெட்ரோ,புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமேஅனுமதி வழங்கப்படுகிறது.
  • வழிபாட்டுதலங்களில் வெள்ளி,சனி,ஞாயிறுகளில் அனுமதி இல்லை.
  • அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com